கறம்பக்குடி அருகே குடும்ப பிரச்சினையில் அருவா,உருட்டு கட்டையால் கொலை வெறி தாக்கு, இருவருக்கு சிறை மற்ற நபர்கள் தப்பியோட்டம்

கறம்பக்குடி தாலுகா பல்லவராயன்பத்தை ஊராட்சி, குலப்பெண்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காஸ்ப்பர் மகன் தேவசகாயம் ( வயது 51) இவருடைய மனைவி சின்னம்மாள் இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சின்னம்மாள் கோவித்து கொண்டு தனது வீட்டின் அருகே உள்ள ஜோஸ்வா வீட்டிற்கு சென்று பின்பு தந்தை வீட்டிற்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. சின்னம்மாள் கணவர் ஜோஸ்வாவிடம் நீதான் என் மனைவிக்கு பணம் கொடுத்து அனுப்பி வைத்தாய் அதனால் நீதான் என் மனைவியை கூட்டி வரவேண்டும் என்று கூறியுள்ளார்.

வீட்டின் அருகே உள்ள அடைக்கலம் மகன் குழந்தைசாமி, அடைக்கலம் மகன் அருள்சாமி,விசுவாசம் மகன்கள் ஜோஸ்வா, ஜோயல்,அதிசயம் மகன் ஜீவக் ஆகியோர் தேவசகாயத்தை கட்டி வைத்து தாக்கியதாக முதல் விசாரனையில் கூறப்படுகிறது.பின்னர் அடைக்கலம் மகன்கள் குழந்தைசாமி , அருள்சாமி மற்றும் விசுவாசம் மகன் ஜோஸ்வா ஆகிய மூவரும் அருவாளால் தேவசகாயத்தின் தலை,கைகளில், வெட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.மற்ற நபர்களும் மரக்கட்டையாள் தாக்கியும், தேவசகாயத்துக்கு வலது கட்டை விரல், ஆல் காட்டி விரல் மற்றும் தலையில் பல இடங்களில் பலத்த காயங்களுடன் இரத்தம் சொட்ட சொட்ட காயம் ஏற்பட்டு துடிதுடிக்க கிடந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கதினர், புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக தேவசகாயம் கறம்பக்குடி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். புகார் மனுவை பெற்றுக்கொண்ட கறம்பக்குடி காவல் உதவி ஆய்வாளர் சாந்தி வழக்கு பதிவு செய்து கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட அடைக்கலம் மகன் அருள்சாமி, விசுவாசம் மகன் ஜோஸ்வா ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார். ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்னிலையில் ஆஜர்படுத்தி திருச்சி மற்றும் புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.மேலும் தப்பி ஓடிய நபர்களை கறம்பக்குடி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *