தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி – II மற்றும் தொகுதி – IIAபதவிகளுக்கான முதல் நிலை தேர்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி மற்றும் புதுக்கோட்டை மௌண்ட் சியோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தொகுதி – – II மற்றும்
தொகுதி – IIA பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு நடைபெறுவதை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் இன்று (21.05.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது;
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், தமிழக அரசின் பல்வேறு பணிகளுக்கு தகுதி உள்ள நபர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி தமிழகம் முழுவதும் இன்றையதினம் டி.என்.பி.எஸ்.சி. தொகுதி – – II மற்றும் தொகுதி – IIA பதவிகளுக்கான தேர்வு நடைபெற்றது.
புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியில்
நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. தொகுதி – – II மற்றும் தொகுதி – IIA பதவிகளுக்கான தேர்வு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. தேர்வு நடைபெறும் மையங்களில் கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 58 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 82 தேர்வு மையங்களில் இன்றையதினம் நடைபெற்ற தேர்வினை 19,612 நபர்கள் எழுதினர். 3,009 நபர்கள் தேர்விற்கு வரவில்லை. தேர்வு மையத்திற்குள் கைப்பேசி, கால்குலேட்டர் உள்ளிட்ட பல்வேறு மின்னணு
சாதனங்கள் தடைசெய்யப்பட்டிருந்தது. இத்தேர்வினை 82 முதன்மை கண்காணிப்பு அலுவலர்களும், 20 சுற்றுக்குழு அலுவலர்களும், 11 பறக்கும் படை அலுவலர்களும், 164 ஆய்வு அலுவலர்களாலும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இத்தேர்வு நிகழ்வுகளை
88 வீடியோகிராபர்கள் மூலமாக கண்காணித்து தேர்வு நடைமுறைகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. தேர்வுகள் நடைபெற்று வரும் அனைத்து மையங்களிலும் தேர்வுகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு, சுமுகமான
முறையில் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் அபிநயா மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *