அன்னவாசல் அருகே மதியநல்லூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி

அன்னவாசல் அருகே உள்ள மதியநல்லூரில் அடைக்கலம் காத்தார் , முனியப்பச்சி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியை முன்னாள் அமைச்சர்,விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் இலுப்பூர் வருவாய் கோட்டாச்சியர் குழந்தைசாமி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இந்த போட்டியில் 900 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகளை மாடுபிடி வீரர்கள் ஆர்வமுடன் அடக்கினர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சிவகங்கை , புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, ராமநாதபுரம், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த காளைகள் பங்கேற்றது. இதில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு சைக்கிள், வெள்ளிக்காசு, பீரோ ,கட்டில், சில்வர் அண்டா, குக்கர், அயர்ன்பாக்ஸ் உள்ளிட்டவை பரிசுப் பொருட்களாக வழங்கப்பட்டது.
மேலும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சார்பில் சிறந்த காளைகளுக்கும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் ரொக்கபரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த ஜல்லிகட்டு போட்டியை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பார்த்து ரசித்தனர்.

WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *