பொன்னமராவதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராஜீவ்காந்தியின் 31 ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்

பொன்னமராவதியில் உள்ள வட்டார நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காந்தி சிலை முன்பு ராஜீவ் காந்தியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்பு பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்ததை கண்டித்து வாயில் துணி கட்டியபடி அறவழிப் போராட்டம் நடத்தினர். இதில் முன்னாள் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராம.சுப்புராம் தலைமையில் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர் கிரிதரன், நகர தலைவர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜீவானந்தம், மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட வர்த்தக அணி மாவட்ட தலைவர் பாஸ்கர் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள், வட்டார நகர காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பதாகை ஏந்தி வாயில் துணி கட்டி அறவழிப் போராட்டம் நடத்தினர்.

WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *