குழிபிறையில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு திருவிழா

திருமயம் அருகே குழிபிறை ஸ்ரீ உலகநாயகி அம்மன் மற்றும் ஸ்ரீசந்திகருப்பர் ஆலய வைகாசி திருவிழாவை முன்னிட்டு வாகைக்கண்மாயில் மஞ்சுவிரட்டு திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் தமிழக வீட்டு வசதி வாரிய தலைவரும், அதிமுக தெற்கு மாவட்ட செயலாளருமான பிகே.வைரமுத்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, திண்டுக்கல், தேனி ,ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த 500க்கும் மேற்பட்ட காளைகளும் மற்றும் 300 காளையர்கள் பங்கேற்றனர். வாடிவாசலில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்க்கப்பட்ட காளைகள் துள்ளி குதித்து சீறிப் பாய்ந்து வருவதை காளையர்கள் மல்லுக்கட்டி அடக்கி மகிழ்ந்தனர். இந்த ஜல்லிக்கட்டில் சிறந்த முறையில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மஞ்சுவிரட்டில் பனையபட்டி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல் சுகாதாரத்துறை, கால்நடைத்துறை, வருவாய்த்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் கண்காணிப்பில் இந்த மஞ்சுவிரட்டு சிறப்பாக நடைபெற்றது.

இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் 12 பேர் காயமடைந்தனர்.பலத்த காயமடைந்தவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *