மாவட்ட ஆட்சியரகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியினைமாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.மா.செல்வி அவர்கள் தலைமையில் அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் ஏற்றுக்கொண்டனர்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியினை, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.மா.செல்வி அவர்கள் தலைமையில் அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் இன்று (20.05.2022)
ஏற்றுக்கொண்டனர். கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி பின்வருமாறு, அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகிய நம் நாட்டின் மரபுகளில் தளராத நம்பிக்கையுடைய இந்திய மக்களாகிய நாம், எவ்வகையான கொடுஞ்செயல்களையும்,
வன்முறைகளையும் முழு ஆற்றலோடு எதிர்ப்போம் என உறுதி கூறுகிறோம். எல்லா மக்களிடத்தும், அமைதி, சமுதாய ஒற்றுமை, நல்லுணர்வு ஆகியவற்றைப் போற்றி வளர்க்கவும், மக்களுடைய உயிர்களுக்கும் மற்றும் நற்பண்புகளுக்கும் ஊறு விளைவிக்கும் பிரிவினைச் சக்திகளை எதிர்த்துப் போராடவும், நாம் உறுதி கூறுகிறோம் என்ற றுதிமொழியினை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.மா.செல்வி அவர்கள்
தலைமையில் அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *