முன்னாள் படைவீரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு அவர்கள் தலைமையில் நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (12.05.2022) நடைபெற்றது.
நமது நாட்டை காக்கும் உன்னத பணியில் ஈடுபட்ட முன்னாள் படைவீரர்களின் குறைகளை போக்கும் வகையில் 3 மாதத்திற்கு ஒருமுறை குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய தினம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர்களுக்கு குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் படைவீரர்களிடமிருந்து நில ஒப்படைப்பு, வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு, குடிநீர்வசதி, மின்விளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 29 மனுக்கள் பெறப்பட்டு இம்மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கப்பட்டது. மேலும் சென்ற முறை குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
தமிழக அரசு முன்னாள் படைவீரர்களுக்கு சுயதொழில் தொடங்க வங்கிக்கடன் வட்டி மானியத்திட்டம், தொழிற்கடன் மானியம், அரசு போட்டித்தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான
திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி இன்றைய தினம் 13 நபர்களுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.2.60 லட்சம் மதிப்பிலான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் தி.கி.செண்பகவல்லி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சொர்ணராஜ், அலுவலர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் கலந்து கொண்டனர்.

WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *