கஞ்சி காய்ச்சி பாய் தலையணையுடன் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நூதன முறையில் போராட்டம்

அறந்தாங்கி ஒன்றியத்தில் மாட்டுவண்டிக்கு மணல் குவாரி அமைக்க கோரி மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம் மற்றும் கட்டிட தொழிலாளர் சங்கம் இணைந்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் கஞ்சி காய்ச்சி வைத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர். இதில் அறந்தாங்கி ஒன்றியத்தில் அனைத்து மாட்டுவண்டி தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் மணல் குவாரி அமைக்க வேண்டும், அறந்தாங்கி ஒன்றியத்தில் தூர்வாரப்படாத ஏரிகள், குளங்களில் மாட்டு வண்டியில் வண்டல் மண் அல்ல தடையில்லா சான்று வழங்க வேண்டும். சிறைபிடித்த மாட்டு வண்டிகளை விடுதலை செய்தும். மாட்டு வண்டி தொழிலாளி மீது தொடரப்பட்ட வழக்கை திரும்பப் பெற வேண்டும், மணல் தட்டுப்பாட்டால் வேலை இன்றி தவிக்கும் கட்டிட தொழிலாளர்கள் மற்றும் மாட்டுவண்டி தொழிலாளர்கள் குடும்பங்களை பாதுகாக்க கோரியும், தமிழக அரசு நலவாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர்கள் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கஞ்சி காய்ச்சி உணவருந்தி தலையணை பாயில் படுத்துறங்கி காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *