புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட வாகனங்களை ஏலம் விடுவது தொடர்பான முன் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் காவல் நிலையங்களில் மது தொடர்பான வழக்குகளில் சம்பந்தப்பட்ட வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து கைப்பற்றப்பட்ட நான்கு சக்கர வாகனம் – 2, மூன்று சக்கர வாகனம் – 1 மற்றும் இருசக்கர வாகனம் – 19 ஆக மொத்தம் 22 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின் பேரில் துணை இயக்குனர் தானியங்ககி பணிமனை அவர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில் வரும் 18.05.2022 -ம் தேதி காலை 08.00 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் அமைக்கப்பட்ட குழு முன்னிலையில் பகிரங்க ஏலம் விடப்பட உள்ளது. இதில் கலந்து கொண்டு ஏலம் எடுக்க விரும்பும் நபர்கள் இருசக்கர வாகனம் எடுக்க முன்பணத்தொகை 1000/- மூன்று சக்கர வாகனத்திற்கு முன்பணத்தொகை 2000/- மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு முன்பணத்தொகை 5,000/- செலுத்தி டோக்கன் பெற்று ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

ஏலம் எடுத்த நபர் ஏலத்தொகையுடன் மாநில அரசுக்கான ஜிஎஸ்டி மற்றும் மத்திய அரசிற்கான ஜிஎஸ்டி தொகையுடன் சேர்த்து செலுத்திய பிறகு ஏலம் எடுத்த வாகனம் ஏலம் எடுத்த நபரிடம் தகுந்த சான்றுகளுடன் ஒப்படைக்கப்படும். இந்த ஏலத்தில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள்ஏல முன் பணத்தொகையை வாகனத்தை புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வரும் 16.05.2022 மற்றும் 17.05.2022-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வாகனத்தை பார்வையிடலாம் மற்றும் ஏலத்தில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் ஏல முன் பணத்தொகையை ஆயுதப்படை வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். 18. 05. 2022 தேதி எக்காரணத்தை முன்னிட்டும் டோக்கன் வழங்கப்படமாட்டாது.
டோக்கன் பெற்று ஏலத்தில் கலந்து கொண்டு ஏலம் எடுக்காத நபர்கள் முன்பதிவு தொகை அன்று மாலை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் ஏலத்தில் கலந்து கொண்டு ஏலம் எடுத்த வாகனத்திற்கு உரிய தொகை செலுத்தாமல் இருந்தால் முன்பணத்தொகையை திருப்பி தர இயலாது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொண்டனர்.

WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *