ஆட்சியரகத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ் உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் தொழில் குழுக்களுக்கு துவக்க நிதிக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ், உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் தொழில் குழுக்களுக்கு துவக்க நிதிக்கான காசோலைகளை, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் இன்று (09.05.2022) வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது;
தமிழக அரசு உலக வங்கி நிதியுதவியுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் செயல்படுத்தி வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம், ஊரக தொழில்களை மேம்படுத்தல், வேலைவாய்ப்பு மற்றும் நிதிசேவைகளுக்கு வழிவகுத்தல் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, திருவரங்குளம், அறந்தாங்கி மற்றும் விராலிமலை வட்டாரங்களைச் சார்ந்த 172 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. ஊரக பகுதிகளில் சிறு மற்றும் குறு பெண் விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கில் பெண் விவசாயிகளை கொண்டு விவசாய உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும்
பால் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றது. மேலும் ஊரக பகுதிகளில் சிறு, குறு தொழில்கள் ஊக்குவிக்கும் வகையில் ஒரே வகையான தொழிலில் ஈடுபட்டு வரும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் அல்லது சுயஉதவிக் குழுவை சார்ந்த குடும்ப உறுப்பினர்களை ஒருங்கிணைத்து தொழில் குழு துவங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைக்கப்படும் உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் தொழில் குழுக்களுக்கு துவக்க நிதியாக ரூபாய் எழுபத்தி ஐந்தாயிரம் மானியமாக வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் வழங்கப்படுகின்றது.
இதுவரை நிதிபெற தகுதி வாய்ந்த 41 உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் 13 தொழில் குழுக்களுக்கு துவக்க நிதி மானியமாக தலா ரூபாய் 75,000 (எழுபத்தி ஐந்தாயிரம்) வீதம் ரூபாய் 40,50,000 (நாற்பது லட்சத்தி ஐம்பதாயிரம்)
வழங்கப்பட்டுள்ளது.
தற்பொழுது, மேலும் நிதிபெற தொகுதியுள்ள 26 உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் 14 தொழில் குழுக்களுக்கு துவக்க நிதி மானியமாக தலா ரூபாய் 75,000 (எழுபத்தி ஐந்தாயிரம்) வீதம் ரூபாய் 30,00,000 (முப்பது லட்சம்) இன்று (09.05.2022)
வழங்கப்பட்டுள்ளது. இந்நிதியை பயன்படுத்தி தொழில்குழு உறுப்பினர்கள் தங்கள் தொழில் குழுக்களுக்கு தேவையான பொது உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொள்வதற்காகவும், விவசாய உற்பத்தியாளர் குழுக்கள் விவசாய உற்பத்திக்கு தேவையான விதைகள், இடுபொருட்கள் மற்றும் சிறுகருவிகள் வாங்குவதற்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட செயல் அலுவலர் ஜெய்கணேஷ் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372