பொன்னமராவதி அருகே தேனூர் கிராமத்தில் சித்திரை திருவிழா

பொன்னமராவதி அருகே தேனூர் கிராமத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை,தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 785 காளைகளும், 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் மாடுபிடி வீரர்கள்‌ மூன்று சுற்றுகளாக களம்கண்டு உள்ளனர். மருத்துவ பரிசோதனைக்கு பின்பே மாடுகளும், மாடுபிடி வீரர்களும் போட்டிக்கு அனுமதிக்கப்படுகின்றனர். போட்டி தொடங்கும் முன் ஜல்லிக்கட்டு வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். ஜல்லிக்கட்டு தொடங்கும் முன் அருகிலுள்ள ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் மேளதாளங்கள் முழங்க ஜவுளி எடுத்து வந்தனர். முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதனையடுத்து மற்ற‌காளைகளும் அவிழ்த்துவிடப்பட்டன. வெற்றி பெற்ற காளைகள் மற்றும் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு சைக்கிள், பீரோ, வெள்ளிக்காசு, குக்கர், தங்கக்காசு, கட்டில், சேர் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்களை தேனூர் ஊராட்சி மன்ற தலைவர் கிரிதரன் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினர்கள் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, திமுக ஒன்றிய கழகச் செயலாளர் அடைக்கலமணி, நகரக் கழகச் செயலாளர் அழகப்பன், அதிமுகவினர் தொழிலதிபர் குமாரசாமி, வடக்கு ஒன்றிய கழகச்செயலாளர் முருகேசன் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர். சீறிப் பாய்ந்த காளைகளை மாடு பிடி வீரர்கள் வீரத்துடன் அடக்கினர். போட்டியை காண பொன்னமராவதி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 5000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் உத்தரவின் பேரில் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பொன்னமராவதி தீயணைப்பு துறையினர் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *