புதுக்கோட்டை நகராட்சி, நரிமேடு பகுதியில் மாவட்ட இசைப் பள்ளிக்கான புதிய கட்டட கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

புதுக்கோட்டை நகராட்சி, நரிமேடு பகுதியில், மாவட்ட இசைப் பள்ளிக்கான புதிய கட்டடம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள்
இன்று (06.05.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது;
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசுத் துறைகளுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் புதிக கட்டடங்களை கட்டுதல், பழைய கட்டடங்களை புனரமைத்து சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை பொதுப்பணித்துறையின் மூலமாக மேற்கொண்டு வருகிறார்கள். அதனடிப்படையில் புதுக்கோட்டை நகராட்சி, நரிமேடு பகுதியில், மாவட்ட இசை பள்ளிக்கான புதிய கட்டடம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வளாகத்தில் இசைப் பள்ளிக்கான 6 வகுப்பறை கட்டடங்கள், அலுவலக அறைகள், முதல்வர் அறை, கழிவறை, அலுவலர்கள் அறை, பொருட்கள் வைப்பறை உள்ளிட்டவைகள் 4,520 சதுர.அடி பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் இசைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு போதுமான
இடவசதி கிடைக்கப்பெறுவதுடன், தங்களது இசை கற்றலையும் நிறைவாக பூர்த்தி செய்ய உதவிகரமாக அமையும். மேலும் இக்கட்டுமானப் பணிகள் அனைத்தும் உரிய காலத்திற்குள் நிறைவு செய்து, இசைப் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட
ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுகுமாரன், உதவிப்பொறியாளர் பாஸ்கர், கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குநர் மு.க.சுந்தர்
மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *