முன்னாள் படைவீரர் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் 12.05.2022 அன்று நடைபெறவுள்ளது

புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் 12.05.2022 அன்று முற்பகல் 11.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் நடத்தப்பட உள்ளது.

எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள்/ விதவையர்கள் மற்றும் படைவீரர்களைச் சார்ந்தோர் அவர்களின் குறைகள் குறித்த மனுக்களை அன்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் நேரடியாக வழங்கலாம். மனு அளித்திட விரும்பும் முன்னாள் படைவீரர்/ விதவையர் அவர்களது கோரிக்கை குறித்த மனுக்களை, இரட்டைப்பிரதிகளில், அடையாள அட்டை நகலுடன் வழங்குதல் வேண்டும்.

மேலும் மனு அளிக்க விரும்பும், முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தங்களது மனுக்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு அவர்கள் தெரிவித்துள்ளார்.

WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *