ஆலங்குடியில் ரமலான் நோன்பு முடிந்து முஸ்லிம்கள் ஈத் தொழுகை

ஆலங்குடியில் ரமலான் நோன்பு முடிந்து முஸ்லீம்கள் ஈத்தொழுகை இஸ்லாமிய மார்க்கம் பெருநாள் தினத்தை இன்று மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
ஆலங்குடி ஜமாத் தலைவர் அபுதாகீர், செயலாளர் அப்துல் கனி, பொருளாளர் ஹமீர்தீன் மரம்ஜான் ஈத்தில் முதியவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் என சுமார்500 க்கும் அதிகமானோர் ரம்ஜான் விழாவில் கலந்து கொண்டனர்.
கல்லாலங்குடி
இதுபோல் கல்லாலங்குடி ஊராட்சி கலிபுல்லா நகர் ஜும்மா பள்ளிவாசல் ஜமாத்தார்களால் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது . திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கல்லாலங்குடி கலிபுல்லா நகர் ஜும்மா பள்ளிவாசல் ஜமாத்தார்கள் மற்றும் இஸ்லாமிய பெருமக்களால் கடந்த 30 நாட்கள் நோன்பிருந்து 5 வேளை தொழுகை நடத்தி வந்தனர்.
இதன் முக்கிய நிகழ்வான ரம்ஜான் சிறப்பு தொழுகை இன்று கலிபுல்லா நகரின் மையப் பகுதியில் நடைபெற்றது. இதில் அனைத்து மக்களும் நலம் பெற வேண்டும் என்றும் பெரும் தொற்றில் இருந்து மக்களை விடுவிக்க வேண்டும் என்றும்
மக்கள் யாவரும் நலமுடனும் வளமுடனும் வாழ வேண்டுமென வேண்டியும் சிறப்பு தொழுகையானது நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கலி புல்லா நகர் ஜூம்மா பள்ளிவாசல் ஜமாத்தார்கள் இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *