அறந்தாங்கி பகுதிகளில் மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு, மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு
மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் இன்று (03.05.2022) அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது;
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் நலனுக்காக எண்ணற்ற வளர்ச்சித் திட்டப் பணிகளை செயல்படுத்தியுள்ளார்கள். அந்தவகையில் இன்றையதினம் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்
நாட்டப்பட்டுள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், ஆயிங்குடி
மேற்கு மொச்சி பிள்ளையார் கோவில் அருகில் ரூ.6.36 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள பேவர் பிளாக் சாலை பணி, வல்லவாரி மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.11.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள சுற்றுச்சுவர் கட்டுமானப் பணி, ஆயிங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.7.40 லட்சம்
மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள சுற்றுச்சுவர் கட்டுமானப் பணி, ஆயிங்குடி ஆதிதிராவிடர் காலனியில் ரூ.14.16 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள மயான சாலை பணி, ஆயிங்குடி மேற்கில் ரூ.11.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள மயான சாலை பணி, மாத்தூர் இராமசாமிபுரம் மாரியம்மன் கோவில்
அருகில் ரூ.8.49 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள பேவர் பிளாக் சாலை பணி ஆகிய பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிங்குடி ஆதிதிராவிடர் காலனியில் ரூ.8.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலை பணி இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் அனைவரும் இதனை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்
திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, வருவாய் கோட்டாட்சியர் சு.சொர்ணராஜ், அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *