திருமயம் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களை மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் வழங்கினார்

திருமயம் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில், தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறையின் சார்பில், விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களை, மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும்
ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள் இன்று (02.05.2022) வழங்கினார்.

இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் அவர்கள் பேசியதாவது;

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் இன்றையதினம் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில், தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறையின் சார்பில், விவசாயிகளுக்கு
வேளாண் இடுபொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 1,000 விவசாயிகள் பயனடையும் வகையில் முன்னோடித் திட்டமான கூட்டுப்பண்ணையம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறைந்தபட்சம்
20 விவசாயிகளை கொண்டு 5 விவசாய ஆர்வலர் குழுக்கள் (FIG) ஆரம்பிக்கப்பட வேண்டும். விவசாய ஆர்வலர் குழுக்களின் உறுப்பினர்களான 100 விவசாயிகளைக் கொண்டு உழவர் உற்பத்தியாளர் குழு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு உறுப்பினர்களும் தலா ரூ.1,000 நிதி பங்களிப்பு மற்றும் உறுப்பினர் சேர்க்கைக்கு தலா ரூ.100 என நிதிபங்களிப்பு திரட்டப்பட்டு, வங்கியில் செலுத்தி கூட்டுப்பண்ணையம் குழு என வங்கி கணக்கு துவங்கப்பட வேண்டும். இக்குழுக்களுக்கு வேளாண் கருவிகள் விவசாயிகளின் தேவைக்கேற்ப பெற்றுக்கொள்ள ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது.

இதன் முக்கிய நோக்கங்கள் சிறு, குறு விவசாயிகளை கண்டறிந்து குழுக்கள் அமைக்க வேண்டும். விவசாயிகள் தானாகவே முன்வந்து இணைதல் வேண்டும். விவசாயிகள் நிலத்தின் உரிமையை தக்க வைத்தல். நிலபங்களிப்பு மற்றும் உழைப்பின் அடிப்படையில் மொத்த விளை பொருட்களுக்கான பங்குகளை ஒவ்வொரு
உறுப்பினர்களுக்கும் கிடைக்க செய்தல் ஆகும். இதன்மூலம் சிறு, குறு விவசாயிகள் அனைத்து பயன்களையும் பெற்று வருமானம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசால் கூட்டுப்பண்ணையம் என்ற முன்னோடித் திட்டம் அறிவிக்கப்படுகிறது. விவசாயிகளின் உற்பத்தியானது பலமடங்கு பெருகுவதன் மூலம் நாட்டின் வளர்ச்சியும் பெருகும். வேளாண் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுவிட்டால் மற்ற அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு
பெற்றுவிடலாம். எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் வேளாண் உற்பத்தியை பலமடங்கு பெருக்கி, புதுக்கோட்டை மாவட்ட வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார், தோட்டக்கலை துணை இயக்குநர் குருமணி, ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு (எ) சிதம்பரம், ஆர்.எம்.கருப்பையா மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். .

WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *