பொன்னமராவதியில் அதிமுக சார்பில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின பொதுக்கூட்டம்

பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகே எம்.ஜி.ஆர் திடலில் மே தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் தமிழக வீட்டுவசதி வாரிய தலைவரும் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளருமான பிகே. வைரமுத்து மற்றும் முன்னாள் அமைச்சரும் அதிமுக மீனவரணி இணைச்செயலாளருமான ஜெயபால், கழக மகளிரணி இணைச்செயலாளர் சக்தி கோதண்டம், தலைமை கழக பேச்சாளர்‌ வைகை பாண்டி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் முன்னாள் அமைச்சர் ஜெயபால் அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசுகையில் தமிழக முதல்வருக்கு நிர்வாக திறமை கிடையாது, மேலும் சொத்துவரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது என்று பேசினார். இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.எல்.ஏ.ராஜநாயகம், விராச்சிலை தொழிலதிபர் குமாரசாமி, மாவட்ட கவுன்சிலர் பாண்டியன், மற்றும் அதிமுக மாவட்ட, ஒன்றிய, நகர கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *