மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.மா.செல்வி அவர்கள் தலைமையில் இன்று (02.05.2022) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 320 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களிடம் அளித்தனர்.
இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள், இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
மேலும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலவாரிய திட்டத்தின்கீழ், இயற்கை மரணம் நிதிஉதவி வழங்கும் திட்டத்தின் மூலமாக இயற்கை மரணமடைந்த 20 மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்திற்கு ரூ.3,40,000 காசோலையினையும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.9,000
மதிப்பீட்டில் மூன்று சக்கர வண்டி, ஊன்று கோலும் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.54,790 மதிப்பீட்டில் விலையில்லா மின் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரமும் என ஆகமொத்தம் ரூ.4,03,790 மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை
மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.மா.செல்வி அவர்கள் வழங்கினார்.

இக்கூட்டத்தில் தனி மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு) பெ.வே.சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) (பொ) கணேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *