திருவரங்குளம் ஊராட்சி வேங்கிடகுளத்தில் கிராமசபை கூட்டம்

திருவரங்குளம் ஊராட்சி வேங்கிடகுளத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டம் நடை பெறுவது சம்பந்தமாக பொதுமக்களுக்கு முறையான தகவல் தெரிவிக்காத காரணத்தால் மிகக்குறைந்த அளவில் பொதுமக்களே கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும்
ஒரு சிலர் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை
எடுத்துரைத்தனர். இதேபோல் பல முறை கிராம சபை கூட்டத்தில் கோரிக்கைகளை முன்வைத்தும்
எந்த விதமான நடவடிக்கை இல்லை என்று அப்பகுதி மக்கள் இன்று நடைபெற்ற கூட்டத்திலும்
தங்களது கோரிக்கைகளான குடிநீர் வசதி, சாலை வசதி , பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு
மைதானம், தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லாமல் கிராம மக்கள் பெரிதும்
இன்னல் அடைவதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்
தற்போது நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தங்களது கோரிக்கைகள் தீர்மானங்களாக
ஏற்றப்பட்டன. அந்த தீர்மானங்கள் வேங்கிடகுள ஊராட்சியில் 90 நாட்களில் நிறைவேற்றாவிட்டால்
மக்களைத் திரட்டி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்று ஊர்மக்கள் தெரிவித்தனர்.

WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *