தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மாவட்ட குழு நடத்தும் ஆவணப்படம் வெளியீடு திரையிடல் விழா

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திடல் இலக்கிய கூடலின் சார்பில் ஆவணப்பட வெளியீட்டு விழா புதுக்கோட்டை அறிவியல் இயக்க கூட்ட அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு தமுஎகச மாவட்டத் தலைவர் எம்.ஸ்டாலின் சரவணன் தலைமை வகித்தார். செயலாளர் சு.மதியழகன் வரவேற்றார். விழாவில் கலந்துகொண்டு ‘ட்ரீம் ஆப் ஒலிப்பிக்’ என்ற ஆவணப்படத்தை வெளியிட்டு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் சிறப்புரையாற்றினார். கவிஞர்கள் நா.முத்துநிலவன், தங்கம்மூர்த்தி, ஜீவி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

விழாவில் கவிநாடு இளைஞர் விளையாட்டு மன்றத் தலைவர் பிவிஆர்.சேகரன் பயிற்சியாளர் எஸ்.லோகநாதன், ஆவணப்பட இயக்குனர்கள் ராஜூ மாரியப்பன், சிவ.சித்திரைச்செல்வன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

‘ட்ரீம் ஆப் ஒலிப்பிக்’ மற்றும் நாடோடி ஆகிய ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன. திரைப்படங்கள் குறித்து எஸ்.இளங்கோ, கி.ஜெயபாலன், ஆர்.நீலா, துரை.அரிபாஸ்கர், அ.மணவாளன் உள்ளிட்டோர் பேசினர். முடிவில் புதுகை கிளைச் செயலாளர் சு.பீர்முகமது நன்றி கூறினார்.

WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *