ஆவுடையார்கோவில் அருகே முத்துக்குடா சுற்றுலாத்தலத்தை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் நேரில் பார்வையிட்டார்

ஆவுடையார்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட முத்துக்குடா கிராமத்தை சுற்றுலாத்தலமாக அறிவிக்க அப்பகுதியில் உள்ள பொது மக்களும் மீனவர்களும் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது அதை வலியுறுத்தி தமிழக அரசும் அந்த பகுதியை சுற்றுலா தளமாக அறிவித்து, அதனால் அறந்தாங்கி
சட்டமன்ற உறுப்பினர் எஸ்.இராமச்சந்திரன் இன்று அந்த கடற்கரை ஏரியாவிற்கு சென்று
படகு மூலம் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் சென்று கடலில் அலையாத்திக்காடு உள்ளது, தீவு
போல உள்ள பகுதியில் இருந்த ஒரு சில முட்புதர்களை சுத்தம் செய்து அதை சுற்றுலாத்தலமாக
அக்கிராம மக்களும் ஊராட்சி நிர்வாகமும் சேர்ந்து நடவடிக்கை எடுத்திருந்தது அதை இன்று அறந்தாங்கி
சட்டமன்ற உறுப்பினர் நேரில் பார்வை செய்தார். அலையாத்தி காடு என்றால் அந்த அலையாத்தி
செடிகளிலிருந்து ஆக்சிசன் வெளிப்படும் என்று அங்கு உள்ள மீனவர்கள் கூறுகின்றனர். இந்த சுற்றுலா தளத்திற்கு ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக கழிவறைகள் கட்டி கொடுத்து சிறுவர்கள் விளையாடுவதற்கு விளையாட்டு சாதனங்களையும் இந்த பகுதிக்கு வழங்குமாறு தமிழக அரசை
வலியுறுத்துவேன் என்று அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ் ராமச்சந்திரன் அங்கு உள்ள மீன்களிடம்
கூறினார். அவருடன் ஆவுடையார்கோவில் ஒன்றிய துணை பெருந்தலைவர் பிரியாகுப்பு ராஜா, விஸ்வநாதன் முத்து, கிருபா, வீராச்சாமி, காளிதாஸ் மற்றும் ஊர் தலைவர்கள் ஜமாத் தலைவர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.

WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *