கந்தர்வகோட்டை அருகே சங்கம்விடுதியில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி

கந்தர்வகோட்டை தாலுகா சங்கம் விடுதி பகுதியில் நொண்டிமுனி ஆண்டவர் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8-30 -அளவில் தொடங்கப்பட்டது மேலும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, புதுக்கோட்டை மாவட்ட வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே. செல்லபாண்டியன் அயலக அணி மாநில செயலாளர் MP. அப்துல்லா கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளர் மங்களாகோவில் பரமசிவம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்கப்பட்டது

மேலும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர் மேலும் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சைக்கிள், கிப்ட் பேக், டைனிங் டேபிள், குத்துவிளக்கு, சில்வர், குவளை, பிரிட்ஜ், தங்க நாணயம், வெள்ளி நாணயம் மற்றும் காசோலைகள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன. மேலும் காளையின் உரிமையாளர்களுக்கு பாரம்பரிய முறைப்படி வேஷ்டி, சட்டைகள் வழங்கப்பட்டன மற்றும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க வரும் மாடுபிடி வீரர்களுக்கு கொரோனோ பரிசோதனை செய்த பின்பே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை ஊர் பொதுமக்கள் மற்றும் ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்து வருகின்றனர்.

மேலும் காளையின் உரிமையாளர்களுக்கு பாரம்பரிய முறைப்படி வேஷ்டி, சட்டைகள் வழங்கப்பட்டன மற்றும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க வரும் மாடுபிடி வீரர்களுக்கு கொரோனோ பரிசோதனை செய்த பின்பே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை ஊர் பொதுமக்கள் மற்றும் ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *