புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஸ்கார்ப் இந்தியா நிறுவன மனநல பயனாளிகளுக்கு சிட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி திருப்பதி செட்டியார் மஹாலில் ஸ்கார்ப் இந்தியா நிறுவன மனநல பயனாளிகளுக்கு சிட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி திருப்பதி செட்டியார் மஹாலில் ஸ்காரப் இந்தியா நிறுவன மனநல பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கி விழாவினை சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் சிட்டி ரோட்டரி சங்கத்தின் செயலாளர் விநாயகா ரமேஷ் வரவேற்புரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சி சிட்டி ரோட்டரி சங்கத்தின் வழிகாட்டி அனைத்திந்திய விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி, முன்னாள் கௌரவத் தலைவர் மற்றும் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அன்பழகன், கறம்பக்குடி சிட்டி ரோட்டரி சங்கத்தின் துணை ஆளுநர் திருச்செல்வம், கவிஞர் ராம ராமநாதன்,சிட்டி ரோட்டரி சங்க தலைவர் சீனிவாசன், செயலாளர் விநாயகா ரமேஷ், பொருளாளர் தங்கப்பா, சிட்டி ரோட்டரி சங்க முன்னாள் நிர்வாகிகள் ராஜேந்திரன், ரெங்கராஜ், கார்த்திக், பிச்சையா மற்றும் உறுப்பினர்கள் மோகன் சுரேஷ்குமார் சந்திரசேகரன் முனியசாமி, ரெங்கசாமி, கவிஞர் ,ஸ்கார்ப் இந்தியா மனநல மருத்துவமனையின் வாழ்வாதார ஒருங்கிணைப்பாளர் சேகர் களப்பணியாளர் லதா, சம்மனசு மேரி, ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின் இறுதியாக பொருளாளர் தங்கப்பா நன்றியுரை கூறினார். 50க்கும் மேற்பட்ட மனநல பயனாளிகளுக்கு சிட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
. நிகழ்ச்சியின் இறுதியாக சிட்டி ரோட்டரி சங்கத்தினர், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை,வர்த்தக சங்கத்தினர், நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் பட்டாசுகள் வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.
#MrChe #மிஸ்டர்சே
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளWhatsApp Group – https://chat.whatsapp.com/B96RA5NUyRKCJR6HmOiRkK
Facebook Group – https://www.facebook.com/groups/PudukaiNews
Youtube – https://www.youtube.com/channel/UCPGWEM634QbEL_krvaXAHEQ/
Instagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/
Telegram – https://t.me/PudukkottaiNews
Twitter – https://twitter.com/PudukaiNews