புதுக்கோட்டை ஆட்டுக் சந்தை கொட்டும் மழையால் வர்த்தகம் பாதிப்பு வியாபாரிகள் விவசாயிகள் பெரும் நஷ்டம்

புதுக்கோட்டையில் காய்கறி சந்தை மற்றும் ஆட்டுச் சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது .அந்த வகையில் காய்கறி சந்தை மற்றும் ஆட்டு சந்தையும் இன்று நடைபெற்று வருகிறது. தொடர் மழை காரணமாக அதிகமான ஆடுகளை விற்பனைக்கு ஆடு வளர்க்கும் விவசாயிகளும், கிராமங்களில் ஆடுகளை விலைக்கு வாங்கி வந்த வியாபாரிகளும் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

ஆனால் ஆடுகளை வாங்குவதற்கான வியாபாரிகள் வராத காரணத்தினால் வியாபாரம் இன்றி நஷ்டமடைந்த வியாபாரிகள் விவசாயிகள் ஆடுகளை திருப்பி வேனில் ஏற்றிச் சென்றனர். மேலும் மழை பெய்வதால் சந்தையின் உள்ளே போக முடியாத அளவிற்கு சேறும் சகதியுமாக உள்ளதால் வியாபாரிகள், விவசாயிகள் பெரிதும் அவதியுற்றனர். தீபாவளியை முன்னிட்டு ஆட்டு வியாபாரம் நன்றாக இருக்கும் என பெரிய அளவில் முதலீடு செய்து ஆடுகளை வாங்கி வந்த போதிலும் வியாபாரம் இல்லாத காரணத்தினால் பாதிக்கப்படும் நிலையில் உள்ளது. என ஆட்டு வியாபாரிகள் தெரிவித்தனர்.
கடந்த வாரம் நன்றாக வியாபரம் நடந்த நிலையில் இன்று பெரிதும் நஷ்டம் அடைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

WhatsApp Group – https://chat.whatsapp.com/Fvy7SER3GAH2C0k36kGWxu

Facebook Group – https://www.facebook.com/groups/PudukaiNews

Youtube – https://www.youtube.com/channel/UCPGWEM634QbEL_krvaXAHEQ/

Instagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/

Telegram – https://t.me/PudukkottaiNews

Twitter – https://twitter.com/PudukaiNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *