புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 6 மாதத்தில் காணாமல் போன இருசக்கர வாகனங்கள் போலீசார் மீட்டு கொத்தமங்கலத்தைச் சேர்ந்த வாலிபரை கைது செய்தனர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, கொத்தமங்கலம், ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 6 மாதத்தில் அதிக அளவில் இருசக்கர வாகனங்கள் திருடு போயின. இது குறித்து அந்தந்த காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் உத்தரவின் பேரில், நகர காவல் ஆய்வாளர் குருநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தபோது, இருசக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, தனிப்படையினர் அவரிடமிருந்து 31 இருசக்கர வாகனங்களை போலீசார் மீட்டனர். மேலும், அவரிடம் இருந்து 50 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட வேண்டியுள்ளதாக, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட முப்பத்தி ஒரு இருசக்கர வாகனங்களின் மதிப்பு ரூ 10 லட்சம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

WhatsApp Group – https://chat.whatsapp.com/Fvy7SER3GAH2C0k36kGWxu

Facebook Group – https://www.facebook.com/groups/PudukaiNews

Youtube – https://www.youtube.com/channel/UCPGWEM634QbEL_krvaXAHEQ/

Instagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/

Telegram – https://t.me/PudukkottaiNews

Website- www.mrchenews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *