புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனிகடை முக்கத்தில் அறநிலைத்துறை மற்றும் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனி கடை முக்கத்தில் அறநிலைத்துறை மற்றும் தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் சார்பாக மாவட்டச் செயலாளர் அரிமளத்தார் கருப்பையா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கோவில் நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக வங்கிகளில் டெபாசிட் செய்யப்போவதாக அறிவித்துள்ள தமிழக அரசை கண்டித்து பல்வேறு கோசங்களிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் அரிமளத்தார் கருப்பையா நகரச் செயலாளர் காசி கர்ணன், நகர தலைவர் பிரேம்குமார், ஒன்றிய தலைவர் அசோக், பிஜேபி மாவட்ட துணை தலைவர் தமிழரசன், வடக்கு ஒன்றிய தலைவர் அருஞ்சுவே ராஜன், வடக்கு ஒன்றிய தலைவர் முருகன், தெற்கு ஒன்றிய தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணை தலைவர் பிரகாஷ், புதிய தமிழகம் ஒன்றியம் மற்றும் இந்து அன்னையர் முன்னணி கறம்பக்குடி ஒன்றிய இந்து சமுதாயத்தினர் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

WhatsApp Group – https://chat.whatsapp.com/Fvy7SER3GAH2C0k36kGWxu

Facebook Group – https://www.facebook.com/groups/PudukaiNews

Youtube – https://www.youtube.com/channel/UCPGWEM634QbEL_krvaXAHEQ/

Instagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/

Telegram – https://t.me/PudukkottaiNews

Twitter – https://twitter.com/PudukaiNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *