புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் தீயணைப்பு துறை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விபத்தில்லா தீபாவளி போலி ஒத்திகை விழிப்புணர்வு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளி மற்றும் பொன்-புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது.

இதில் திருச்சி மத்திய மண்டல துணை இயக்குநர் சரவணக்குமார் அறிவுறுத்தலின்படி புதுக்கோட்டை மாவட்ட அலுவலர் பானுப்பிரியா ஆலோசனையின் படி பொன்னமராவதி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் சந்தானம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பள்ளிக்கூடங்களில் தீபாவளி பண்டிகையின் போது மாணவர்கள் எவ்வாறு பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போலி ஒத்திகை பயிற்சி செய்து காண்பித்தனர்.

மேலும் மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு தீயணைப்பு படை வீரர்கள் விளக்கம் அளித்தனர். இந்நிகழ்வில் வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வன், ஆசிரியர்கள் மற்றும் பொன்-புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நிர்மலா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

WhatsApp Group – https://chat.whatsapp.com/Fvy7SER3GAH2C0k36kGWxu

Facebook Group – https://www.facebook.com/groups/PudukaiNews

Youtube – https://www.youtube.com/channel/UCPGWEM634QbEL_krvaXAHEQ/

Instagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/

Telegram – https://t.me/PudukkottaiNews

Twitter – https://twitter.com/PudukaiNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *