புதுக்கோட்டை மாவட்டம் அண்ணா சிலை அருகே கட்டிட பணியாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் கட்டிட கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்து கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் சார்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அண்ணா சிலை அருகே நடைபெற்றது. கட்டிட பொறியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் செயற்குழு உறுப்பினர்கள் அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் பொறியாளர் ராஜமுத்து குமார் தலைவர் அண்ணாமலை பொன்னமராவதி கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் இளங்கோ சிவா மாநில கூட்டமைப்பின் முன்னாள் மண்டல தலைவர் பொருளாளர் ராமநாதன் மற்றும் கட்டுமான தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு புதுக்கோட்டை கட்டிட பொறியாளர் சங்கத்தின் தலைவர் பொறியாளர் மதிவாணன் தலைமை தாங்கினார் ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் தர்மராஜன் பொறியாளர்கள் நல்லதம்பி கண்ணன் ஆகியோர் உரையாற்றினார்கள். பின்னர் மாநில கூட்டமைப்பின் அறிவுறுத்தலின்படி மாவட்ட ஆட்சியரை சந்தித்து புதுக்கோட்டை கட்டிட பொறியாளர் சங்கம் மற்றும் பொன்னமராவதி கட்டிட பொறியாளர் சங்கத்தின் சார்பாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது சங்கத்தின் செயலாளர் ராஜேஷ் நன்றி கூறினார்.

MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

WhatsApp Group – https://chat.whatsapp.com/Fvy7SER3GAH2C0k36kGWxu

Facebook Group – https://www.facebook.com/groups/PudukaiNews

Youtube – https://www.youtube.com/channel/UCPGWEM634QbEL_krvaXAHEQ/

Instagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/

Telegram – https://t.me/PudukkottaiNews

Website- www.mrchenews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *