புதுக்கோட்டையில் முதியவர்களுக்கு உதவுவது போல் ஏடிஎம்மில் பணம் திருடிய கும்பல் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வங்கி ஏடிஎம் க்கு பணம் எடுக்க வரும் வயதானவர்களை குறிவைத்து வங்கி ஏடி எம் கார்டில் பணம் எடுக்க உதவி செய்வதுபோல் நடித்து அவர்கள் கொண்டு வரும் ஏடிஎம் கார்டை மாற்றி வேறு ஏடிஎம் கார்டை கொடுத்து அவர்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடி செல்வதாக புகார்கள் வந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக கடந்த 1.10 2021- ம் தேதி புதுக்கோட்டை கீழ ராஜவீதி எஸ்.பி.ஐ ஏடிஎம் பணம் எடுக்கச் சென்ற கண்ணன் வயது 56 என்பவர் அவரது மாமியார் அவர்களின் வங்கி ஏடிஎம் கார்டில் இருந்து ரூபாய் 16, 000 எடுத்துக் கொண்டு திரும்பும் போது அவரது ஏடிஎம் கார்டு கீழே விழுந்ததாகவும் அதை வடமாநிலத்தவர் எடுத்து கொடுத்ததாகவும் அதன் பிறகு தனது மாமியார் வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 50 ஆயிரத்து 700 பணத்தை யாரோ பணத்தை எடுத்து தெரிந்தும் வங்கி ஏடிஎம் கார்டு மாற்றப்பட்டது தெரிந்தும் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ள்ளது. புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் புதுக்கோட்டை நகர பகுதிகள் மற்றும் வங்கி ஏடிஎம் ஆகியவற்றில் உள்ள சுமார் 50 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை கண்டறிந்து திருச்சி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் பதுங்கியிருந்த யாதவ் லால் சஹானி, மகன் பெஹருலால் சஹானி 38 ,

சிங்கா மலை குல்லா, காய்கார்மோத்தி, ஹாரி, பீகார் மாநிலம் ராம்லக்கன் மகன் சுனில்சா (31), கனவ்லி,பட்சிமி சம்பாரன் வித்யா மாவட்ட ம் பீகார் ராம்தார் சஹானி மகன் அரவிந்த் சஹானி (33) , பக்காடியா ஹர்சிதி பூர்வி சம்பாரன் மாவட்டம் பீகார் 3 குற்றவாளிகளை கைது செய்து சுமார் ஒரு பவுன் செயின் ஆகியவற்றை கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி திருமயம் கிளைச் சிறையில் அடைத்துள்ளனர்.

மேற்படி குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை உதவி ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் தனிப்படை காவலர்களை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் பாராட்டினார். மேலும் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தங்களது வங்கி ஏடிஎம் கார்டை கொடுப்பது அவர்களிடம் ரகசிய குறியீட்டு எண் ஆகியவற்றை பகிர்வது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்து ள்ளார்.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

WhatsApp Group – https://chat.whatsapp.com/Fvy7SER3GAH2C0k36kGWxu

Facebook Group – https://www.facebook.com/groups/PudukaiNews

Youtube – https://www.youtube.com/channel/UCPGWEM634QbEL_krvaXAHEQ/

Instagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/

Telegram – https://t.me/PudukkottaiNews

Twitter – https://twitter.com/PudukaiNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *