புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா வெள்ளாளவிடுதி கிராமத்தில் சிலர் மணல் திருட்டில் ஈடுபடுவதாக கந்தர்வகோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கந்தர்வகோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது கறம்பக்குடி தாலுகா நரங்கியபட்டு பகுதியைச் சேர்ந்த பாலையா மகன் குணசேகரன் என்பவர் அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய குணசேகரனை தேடி வருகின்றனர்.
#MrChe #மிஸ்டர்சே
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
WhatsApp Group – https://chat.whatsapp.com/Fvy7SER3GAH2C0k36kGWxu
Facebook Group – https://www.facebook.com/groups/PudukaiNews
Youtube – https://www.youtube.com/channel/UCPGWEM634QbEL_krvaXAHEQ/
Instagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/
Telegram – https://t.me/PudukkottaiNews
Twitter – https://twitter.com/PudukaiNews