புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

அன்னவாசல் அருகே மலைப்பாம்பு பிடிப்பட்டது. தீயணைப்புதுறையினர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அன்னவாசல் அருகே உள்ள கிளிக்குடியை சேர்ந்தவர் அய்யாவு இவர் வீட்டில் கோழி ஆடுகளை வளர்த்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று வீட்டில் வளர்த்து வந்த கோழி ஒன்று சிறிதுநேரம் விடாமல் கத்தியுள்ளது.

பின்னர் கோழி கத்தும் சத்தம்கேட்டு அய்யாவு சென்று பார்த்தபோது.பெரிய நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று கோழியை விழுங்கிக் கொண்டிருந்தது இதை கண்ட அதிர்ச்சி அடைந்த
அய்யாவு இதுகுறித்து இலுப்பூர் தீயணைப்புதுறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.

தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்புதுறை வீரர்கள் சுமார் 10 அடி நீளமும் 25 கிலோ எடையும் கொண்ட மலைப்பாம்பை துறை கருவிகள் மூலம் பிடித்து  வனக்கக்காவலர்களிடம் ஒப்படைத்தனர் பாம்பை பெற்றுக்கொண்ட அவர்கள் சாக்குபையில் பாம்பை அடைத்து நார்த்தாமலை காப்புக்காட்டில் அவிழ்த்து விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

WhatsApp Group – https://chat.whatsapp.com/Fvy7SER3GAH2C0k36kGWxu

Facebook Group – https://www.facebook.com/groups/PudukaiNews

Youtube – https://www.youtube.com/channel/UCPGWEM634QbEL_krvaXAHEQ/

Instagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/

Telegram – https://t.me/PudukkottaiNews

Twitter – https://twitter.com/PudukaiNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *