புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே கோவில் ஜல்லிக்கட்டு காளை மின்னல் தாக்கி பலி

அன்னவாசல் பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய மழை அன்னவாசல் அருகேயுள்ள வவ்வாநேரியில் கோவில் ஜல்லிக்கட்டு காளை மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது அன்னவாசல் சுற்று வட்டாரப் பகுதிகளான இலுப்பூர்,சித்தன்னவாசல், முக்கண்ணாமலைப்பட்டி, நார்த்தாமலை, குடுமியான்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பலத்த இடியுடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் அன்னவாசல் பகுதிகளில் நேற்று முழுவதும் விட்டு விட்டு தொடர்ந்து பலத்த இடியுடன் மழை பெய்தது.அப்போது முக்கண்ணாமலைப்பட்டியை அடுத்த வவ்வாநேறியை சேர்ந்த ரெங்கராஜ் என்பவரது கோவில் ஜல்லிக்கட்டு காளை ஒன்று வயலில் மேய்ச்சலுக்காக கட்டியிருந்த நிலையில் திடிரென மின்னல் தாக்கியதில் அந்த ஜல்லிக்கட்டு கோவில் காளை பரிதாபமாக உயிரிழந்தது. இதனையடுத்து ரெங்கராஜ் குடும்பத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஜல்லிக்கட்டு காளைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர் ஜல்லிக்கட்டு காளை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
#MrChe #மிஸ்டர்சே
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
WhatsApp Group – https://chat.whatsapp.com/Fvy7SER3GAH2C0k36kGWxu
Facebook Group – https://www.facebook.com/groups/PudukaiNews
Youtube – https://www.youtube.com/channel/UCPGWEM634QbEL_krvaXAHEQ/
Instagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/
Telegram – https://t.me/PudukkottaiNews
Twitter – https://twitter.com/PudukaiNews