புதுக்கோட்டையில் இயற்கை விவசாய பொருட்களை பயன்படுத்தி தீபாவளி பண்டிகை பலகார வகைகள் தயாரிக்கப்படுகின்றன

புதுக்கோட்டையில் இயற்கை விவசாயிகள் உற்பத்தி பொருட்கள் கம்பெனி மூலமாக சிறு தானியங்கள் மற்றும் இயற்கை விவசாய பொருட்களை வைத்து தீபாவளி பண்டிகைக்கு தேவையான பலகார வகைகள் தயாரிக்கப்படுகின்றன. இயற்கையாக உற்பத்தி செய்யப்படுகின்ற அரசி மற்றும் சிறுதானியங்களை கொண்டு பல்வேறு விதமான பலகாரங்கள் தயாரிக்கப்படுகின்றன.

இப்பொழுது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தயாரிப்பாக அதிரசம், முறுக்கு, மிக்சர், பக்கோடா மாவு உருண்டை, லட்டு உள்ளிட்ட இனிப்பு , கார வகைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த உணவுப் பொருள்கள் அனைத்துமே இயற்கையாக விவசாயம் செய்யப்பட்ட நெல் மற்றும் சிறு தானியங்களிலிருந்து பொருள்களை மதிப்பு கூட்டு செய்து தயாரிக்கப்படுவதால் உடம்புக்குமிகவும் சத்துள்ளதாக அமைகிறது.

எந்தவிதமான கெடுதலும் இல்லாமல் சிறந்தஉணவாக அமைகிறது . பல கார வகைகள் யாவும் சுய உதவிக்குழு பெண்கள் மூலமாக தயாரிக்கப்படுவதால் பெண்களுக்கும் வேலை வாய்ப்பாக உள்ளது. பல கார வகைகளை புதுக்கோட்டையிலுள்ள பொதுமக்களால் வாங்கப்பட்டு வேறு மாவட்டங்களில் உள்ள அவரது உறவினர்களுக்கும் கொடுத்து அனுப்புகின்றனர்.

இதனால் விவசாயிகள் உற்பத்திப் பொருட்கள் என தயாரிக்கப்படுகின்ற தீபாவளி கார, இனிப்பு வகை பொருள்களுக்கு பெரிதும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. திரளான பொதுமக்கள் வந்து பொருட்களை வாங்கிச் செல்வதால் தயாரிக்கும் பெண் களும் இரவு பகலாக பணி புரிந்து வருகின்றனர். இயற்கை விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கிறது. பணிபுரிகின்ற மகளிர்களுக்கும் விலையும், வேலையும் கிடைப்பதால் அவர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

WhatsApp Group – https://chat.whatsapp.com/Fvy7SER3GAH2C0k36kGWxu

Facebook Group – https://www.facebook.com/groups/PudukaiNews

Youtube – https://www.youtube.com/channel/UCPGWEM634QbEL_krvaXAHEQ/

Instagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/

Telegram – https://t.me/PudukkottaiNews

Website- www.mrchenews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *