புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மின்வேலியை மிதித்ததில் வாலிபர் சாவு; முதியவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை

வயலில் அமைக்கப்பட்ட மின்வேலியை மிதித்ததில் வாலிபர் ஒருவர் இறந்த வழக்கில் முதியவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே எம்.ராசியமங்கலத்தைச் சேர்ந்தவர் ரெங்கசாமி 80 விவசாயியான இவருக்கு கறம்பக்குடியில் இருந்து ஆலங்குடி செல்லும் சாலையில் வயல் உள்ளது. இந்த வயலில் எலி தொல்லையின் காரணமாக மின் வேலி அமைத்து இருக்கிறார்.

இந்த மின்வேலியை கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி சாந்தம் பகுதியை சேர்ந்த முருகேசன் (36) மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து இறந்தார். அவர் மின்வேலியால் இறந்தது தெரியாமலிருக்க அவரது உடலை பக்கத்து தரிசு நிலத்தில் தூக்கிப்போட்டுவிட்டு ரெங்கசாமி தலைமறைவானார். இது தொடர்பாக ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெங்கசாமியை கைது செய்தனர்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் நீதிமன்றம் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குருமூர்த்தி நேற்று தீர்ப்பளித்தார். இதில் மின் வேலியை அமைத்து விபத்து ஏற்படுத்திய வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும், இறந்தவரின் உடலை மறைத்ததற்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் மூன்று மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டதால் அவர் 4 ஆண்டு சிறை தண்டனை அனுபவிப்பார்.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

WhatsApp Group – https://chat.whatsapp.com/Fvy7SER3GAH2C0k36kGWxu

Facebook Group – https://www.facebook.com/groups/PudukaiNews

Youtube – https://www.youtube.com/channel/UCPGWEM634QbEL_krvaXAHEQ/

Instagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/

Telegram – https://t.me/PudukkottaiNews

Twitter – https://twitter.com/PudukaiNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *