பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக புதுக்கோட்டை புகைவண்டி நிலையத்தில் இருந்து பஸ் போக்குவரத்து துவக்கம்

இரயில் பயணிகள் சங்கம், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் மற்றும் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களின் பரிந்துரைப்படி, மாநிலங்களவை உறுப்பினர் வேண்டு கோளுக்கிணங்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிமிடெட் புதுக்கோட்டை மண்டலம் சார்பாக புதுக்கோட்டை புகைவண்டி நிலையத்தில் இருந்து 116G, 284, 211 புதிய வழித்தடத்தினை மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்வில் TNSTC துணை மேலாளர் சுப்பு, மேலாளர்கள் தில்லைராஜ், பழனிவேல், பொதுச்செயலாளர் N.வேலுச்சாமி, செயலாளர் P.பொன்னுச்சாமி, நகர கழக செயலாளர் க.நைனா முகமது, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க தலைவர் மாருதி கண.மோகன்ராஜா, A.ரமேஷ், J.துரைக்கார்த்திகேயன், V.ரவிச்சந்திரன், B.முத்துக்குமார், K.நாகூர்கனி, R.பாஸ்கர், சாத்தையா, செல்வகுமார், செந்தில்குமார், விஜயகுமார், கணேசன் இரயில்வே அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை, பிருந்தாவனம், பழனியப்பா நிறுத்தம், புதிய பேருந்து நிலையம், மகளிர் கலைக் கல்லூரி வழியாக புகைவண்டி நிலையத்திற்கு காலை 4.50 மணிக்கும் – புகைவண்டி நிலையத்திலிருந்து, மகளிர் கலைக் கல்லூரி வழியாக புதுக்கோட்டை பேருந்து நிலையத்திற்கு பேருந்து காலை 5.45 மணிக்கு புறப்படும் – புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து- மகளிர் கலைக் கல்லூரி வழியாக புகைவண்டி நிலையத்திற்கு பேருந்து புறப்படும் நேரம் இரவு 21.05 மணிக்கும்- புகைவண்டி நிலையத்தில் இருந்து – மகளிர் கலைக் கல்லூரி வழியாக புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திற்கு பேருந்து இரவு 21.30 மணிக்கு புறப்படும் – புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து மகளிர் கலைக் கல்லூரி வழியாக புகைவண்டி நிலையத்திற்கு பேருந்து இரவு 21.30 மணிக்கு புறப்படும் – புகைவண்டி நிலையத்திலிருந்து – மகளிர் கலைக் கல்லூரி வழியாக புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து இரவு 22.00 மணிக்கு புறப்படும் என்ற கால அட்டவணையை வெளியிடப்பட்டது நிகழ்ச்சி புதுக்கோட்டை இரயில்வே நிலையத்தில் நடைபெற்றது
#MrChe #மிஸ்டர்சே
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
WhatsApp Group – https://chat.whatsapp.com/Fvy7SER3GAH2C0k36kGWxu
Facebook Group – https://www.facebook.com/groups/PudukaiNews
Youtube – https://www.youtube.com/channel/UCPGWEM634QbEL_krvaXAHEQ/
Instagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/
Telegram – https://t.me/PudukkottaiNews
Website- www.mrchenews.com