புதுக்கோட்டை அருகே ஆலங்குடி கொலை வழக்கில் 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.!!

ஆலங்குடி காவல் சரகத்தில் முன்விரோதம் காரணமாக மதுபோதையில் நண்பனை வெட்டி படுகொலை செய்த வழக்கில் 4 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் முன்விரோதம் காரணமாக விஜய் (எ)செல்வகணபதி 22 .என்பவரை கடந்த 29.8.2021 அன்று ஒரு கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது.

இதுகுறித்து ஆலங்குடி போலீசார் வழக்கில் சம்பந்தப்பட்ட 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 15 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை செய்து மாவட்ட எஸ்பி –யிடம் அறிக்கை அளித்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட எஸ்பி நிஷா-பார்த்திபன்- பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா-ராமு உத்தரவுப்படி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் இருந்த 4 பேர்களுக்கும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

பின்னர் ஆலங்குடி மேல சுண்ணாம்புகாரதெருவை சேர்ந்த சசிதரன் (எ) செந்தில்ராஜா 29, அம்பேத்கர் நகரைச்சேர்ந்தவர்கள் முருகன் மகன் விமல்ராஜ் 22, நாடிமுத்து மகன் வீரமணி.21.போஸ் மகன் வெள்ளைச்சாமி. 21. ஆகிய நான்கு பேர்களும் முன்விரோதம் காரணமாக தாக்கிகொலை செய்தது தொடர்பாக ஆலங்குடி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து இவ்வழக்கின் முக்கிய எதிரிகளாக மேற்படி நான்கு நபர்களும் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

WhatsApp Group – https://chat.whatsapp.com/Fvy7SER3GAH2C0k36kGWxu

Facebook Group – https://www.facebook.com/groups/PudukaiNews

Youtube – https://www.youtube.com/channel/UCPGWEM634QbEL_krvaXAHEQ/

Instagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/

Telegram – https://t.me/PudukkottaiNews

Twitter – https://twitter.com/PudukaiNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *