புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வலைப்யபட்டி நகரத்தார் சங்கம் சார்பில் புற்றுநோய் கண்டறியும் முகாமை துவக்கி வைத்த அமைச்சர்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வலையப்பட்டி மலையாண்டி கோவில் நகர விடுதியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் கலந்துகொண்டு சென்னை வாழ் வலையபட்டி நகரத்தார் சங்கத்தினரின் சார்பில் பொது மக்களுக்கான இலவச புற்றுநோய் கண்டறியும் முகாமை துவக்கி வைத்தார்.

இதில் வலையப்பட்டி இரண்டாம் நம்பர் சாலையிலுள்ள பழனியப்பா தொடக்கப்பள்ளியில் அடுத்த வாரங்களில் முதல் மூன்று நாட்களில் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. இதில் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார். இதில் மருத்துவர்கள் மல்லிகா, ராஜசேகர் ஆகியோர் புற்றுநோய் கண்டறிதலின் அவசியத்தையும், கேன்சர் நோய் குறித்த விழிப்புணர்வு குறித்தும், சிகிச்சையளிக்கும் முகாமின் நோக்கங்களையும் மருத்துவர் எடுத்து கூறினார்.

மேலும் இதில் மருத்துவர் கிருஷ்ணன் தொழிலதிபர் ராஜமாணிக்கம் ஆகியோர் பேசினர். இதில் சென்னை வலையபட்டி நகரத்தார் சங்கத்தின் தலைவர் முத்து, செயலாளர் செந்தில்நாதன், பொருளாளர் ராஜசுந்தரம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். திமுக ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி, நகர செயலாளர் அழகப்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராமன், பேரூராட்சி செயல் அலுவலர் காலசாமி, மருத்துவர் செந்தமிழ்ச்செல்வி, முன்னாள் நகர செயலாளர் கோவை ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

#MrChe

#மிஸ்டர்சே செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

WhatsApp Group – https://chat.whatsapp.com/Fvy7SER3GAH2C0k36kGWxu
Facebook Group – https://www.facebook.com/groups/PudukaiNews
Youtube – https://www.youtube.com/channel/UCPGWEM634QbEL_krvaXAHEQ/
Instagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/
Telegram – https://t.me/PudukkottaiNews
Website- www.mrchenews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *