புதுக்கோட்டை அருகே துக்க நிகழ்ச்சியில் தகராறு; வாலிபரை தாக்கியவர் கைது.!!

ஆலங்குடி அருகே மேலக் கோட்டையில் பொட்டம்மாள் என்பவர் சில தினங்களுக்கு முன் இறந்து விட்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது அதே ஊரைச் சேர்ந்த வீரகேசவன் 20 மற்றும் அவரது நண் பர்கள் சேர்ந்து அதே ஊரைச்சேர்ந்த தென்னவன் 21 என்பவரை தாக்கியதில் காயமடைந்தார்.

இதையடுத்து அவர் ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று ஆலங்குடி வடகாடு முகத்தில் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினார்.

இதையடுத்து போலீசார் அவரை பிடித்து ஆலங்குடி குற்றவியல் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி அறந்தாங்கி கிளை சிறையில் அடைத்தனர்.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

WhatsApp Group – https://chat.whatsapp.com/Fvy7SER3GAH2C0k36kGWxu

Facebook Group – https://www.facebook.com/groups/PudukaiNews

Youtube – https://www.youtube.com/channel/UCPGWEM634QbEL_krvaXAHEQ/

Instagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/

Telegram – https://t.me/PudukkottaiNews

Twitter – https://twitter.com/PudukaiNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *