புதுக்கோட்டை அருகே போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிந் ததால் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை.!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மற்றும் திருவரங்குளம் கடைவீதிகள், சாலைகளின் குறுக்கே கால்நடைகள் நின்று கொண்டும் படுத்துக்கொண்டும் போக்குவரத்துக்கு இடையூறாக அடிக்கடி விபத்துக்களை ஏற்படுத்தி வருவதால் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலை உள்ளது.

இதேபோல் பல்வேறு பகுதிகளில் சாலைக ளில் மாடுகள் சுற்றித் திரிவதால் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் படி சாலையோரத்தில் சுற்றித் திரியும் மாடுகளை மாட்டின் உரிமையாளர்கள் மாலை நேரங்களில் வீட்டுக்கு விரட்டி சென்று கட்டிப் போட்டு வளர்க்கும்படி ஊராட்சி சார்பில் அறிவிப்பு செய்துள்ளனர்.

மாடுகள் சாலையில் சுற்றித் திரிந்தால் மாட்டு உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்து பொதும க்களுக்கு வாகனம் மூலம் ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்து வருகின்றனர்

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

WhatsApp Group – https://chat.whatsapp.com/Fvy7SER3GAH2C0k36kGWxu

Facebook Group – https://www.facebook.com/groups/PudukaiNews

Youtube – https://www.youtube.com/channel/UCPGWEM634QbEL_krvaXAHEQ/

Instagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/

Telegram – https://t.me/PudukkottaiNews

Twitter – https://twitter.com/PudukaiNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *