புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் தமிழரின் பாரம்பரிய போர் கலையான சிலம்பம் போட்டியில் 638 மாணவர்கள் உலக சாதனை.!!

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது. பஞ்சபூதா உலக சாதனை புத்தகத்தின் சார்பாக தமிழரின் பாரம்பரிய போர் கலையான சிலம்பத்தில் 2 கிலோ மீட்டர் நடந்து சென்று 1 மணி நேரம் நின்ற நிலையில் சிலம்பத்தை சுழற்றி 638 மாணவர்கள் சாதனை படைத்தனர்.

நிகழ்ச்சிக்கு இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி
தலைமை தாங்கினார் மாஸ்டர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார்.
இதில் 638 மாணவர்கள் கலந்து கொண்டு இலுப்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து கம்பத்தை சுற்றியவாறு ஊர்வலமாக இலுப்பூர் மேலப்பட்டி அய்யப்பன் கோவில் திடலுக்கு சென்று அங்கு ஒருமணி நேரம் சிலம்பத்தை சுழற்றி சாதனை படைத்தனர்.

விழாவில் தாசில்தார் முத்துக்கருப்பன், அரசு மருத்துவர் புனிதகுமார்,
தனிவட்டாட்சியர் ரவிசந்திரன்,
பள்ளி துணைஆய்வாளர் வேலுச்சாமி, புதுக்கோட்டை சிலம்பாட்ட கழக செயலாளர் சத்தியமூர்த்தி, முதுநிலை வருவாய் ஆய்வாளர் பிச்சை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

WhatsApp Group – https://chat.whatsapp.com/Fvy7SER3GAH2C0k36kGWxu

Facebook Group – https://www.facebook.com/groups/PudukaiNews

Youtube – https://www.youtube.com/channel/UCPGWEM634QbEL_krvaXAHEQ/

Instagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/

Telegram – https://t.me/PudukkottaiNews

Twitter – https://twitter.com/PudukaiNews



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *