புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி மழையூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா மழையூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளர் அன்னக்கொடி தலைமையில் மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் புதுக்கோட்டை மாற்றுத்திறனாளிகளில் செயல்திறன் உதவியாளர் சிவகுமார், பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் கோகிலா, மழையூர் கிராம நிர்வாக அலுவலர் சிந்து, தீத்தானிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சூரியன், கிராம நிர்வாக உதவியாளர் பழனிமுத்து கலைச்செல்வன் திருக்கண்ணன், முகாமில் கலந்து கொண்டனர்.முகாமில் கலந்து கொண்ட அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் மத்திய அரசின் ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் மற்றும் உதவித் தொகைகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்திலிருந்து வருகை தந்த அதிகாரிகள் தெரிவித்தனர். இம்முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் சமூக ஆர்வலர் தீத்தானிப்பட்டி ரெங்கராஜ் அவர்கள் முக கவசம் தேநீர் மற்றும் பிஸ்கட்டுகள் வழங்கி சிறப்பித்தார்.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *