ஜாக்டோ ஜியோ போராட்ட காலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் தமிழக முதல்வர் ரத்து செய்ததற்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் முதல்வருக்கு நன்றி

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி ஜாக்டோ-ஜியோ போராட்ட காலங்களின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத் தையும் இரத்து செய்வதாகவும், போராட்ட காலத்தைப் பணிக்கால மாக அறிவித்து பணிவரன்முறை செய்யப்பட்டு பணிக்காலமாக மாற்றப்படும் என்ற அரசாணைக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், இ டைநிலை ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் ஊதியக்குழுவில் ஏற்பட்ட முரண்பாடுகளை களைய வேண்டும்,

பகுதிநேர ஆசிரியர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகங் கர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் ஆகியோ ருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வே று நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அதிமு க ஆட்சியில் ஜாக்டோ-ஜியோ பேரமைப்பு சார்பாக நியாயமான அற வழி போராட்டங்கள் நடைபெற்றது.

எங்களுடைய கோரிக்கைகளை எதுவும் நிறைவேற்றாத அதிமுக அ ரசு, குறைந்தபட்சம் ஜாக்டோ-ஜியோ பொறுப்பாளர்களை கூட அழை த்து பேசாத அதிமுக அரசு, போராட்டங்களை ஒடுக்குவதற்காக போ லியான வழக்குகள், கைது நடவடிக்கைகள், தற்காலிக பணியிடை நீக்கம், பணிமாறுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆ சிரியர்கள் அரசு ஊழியர்களை அலைகழிப்பு செய்தது.

இதனால் பல ஆயிரக்கணக்கான ஆசிரியர் அரசு ஊழியர்கள் பெரி தும் பாதிக்கப்பட்டனர். எங்களுடைய போராட்டத்தின் நியாயத்தை தன்மையை உணர்ந்து இன்றைய முதல்வரும் அன்றைய எதிர்க்கட் சித் தலைவருமான மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் போராட்ட களத்திற்கே நேரில் வந்து,

உங்களுடைய கோரிக்கைகள் நியாயமானவை என்றும், கழக ஆட்சி அமைந்தவுடன் அத்தனை கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழியை அளித்தார்கள். கூடவே அதிமுக அரசு உங் கள் போராட்டத்தை ஒடுக்குவதற்காக எடுக்கிற அத்தனை நடவடிக் கைகளும் கழக ஆட்சி அமைந்தவுடன் இரத்து செய்யப்படும் என்று போராட்ட களத்திலேயே அறிவித்தார்கள்.

அதோடு மட்டுமல்லாமல் திமுக தேர்தல் அறிக்கையில் எங்களுடை ய கோரிக்கைகளை இடம்பெறச் செய்தார்கள்.தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாகவும், ஜாக்டோ-ஜியோ பேரமைப்பின் சார்பாகவும் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் காரணமாக கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 110 விதியின்கீழ் போராட்ட காலத்தில் எடுக்கப்பட்ட அனைத்து பழிவாங்கும் நடவடிக்களும் ரத்து செய்யப்ப டும் என்ற அறிவிப்பை சட்டமன்றத்தில் வெளியிட்டு இருந்தார்கள். அந்த அறிவிப்பு இன்று அரசாணையாக வெளிவந்திருக்கிறது.

சொன்னதை செய்வோம்! செய்வதைச் சொல்வோம்! என்பதை மீண் டும் ஒருமுறை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் நிரூபித்துள் ளார்கள்.ஜாக்டோ ஜியோ போராட்டகளத்திற்கு வந்து எங்களிடம் சொன்னதை, திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதை, 110 விதி யின் கீழ் சொன்னதை நேற்று தமிழக முதல்வர் அவர்கள் அரசாணை யாக வெளியிட்டு நிருபித்து இருக்கிறார்கள்.

எங்களுடைய அத்தனை கோரிக்கைகளையும் படிப்படியாக நிறை வேற்றுவார்கள் என்ற பெரும் நம்பிக்கை இதன் மூலம் மேலும் எங் களுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆசிரியர்கள் அரசு ஊழியர்களும் மற்று ம் அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் தற்போதைய அறிவிப் பின் மூலம் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார்கள். ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீது அளவற்ற பற்று கொண்ட மாண்புமிகு தமிழக முதல் வர் அவர்களை நன்றியோடு நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கி றார்கள்.

எங்களுடைய கோரிக்கைகளை ஏற்று போராட்ட காலத்தை பணி க்காலமாக அறிவித்து, தற்காலிக பணியிடை நீக்கம் செய்ததை பணிக்காலமாக அறிவித்து அரசாணை வெளியிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாகவும் ஒட்டுமொத்த ஆசிரியர்கள் அரசு ஊழியர்க ள் சார்பாகவும் ஜாக்டோ-ஜியோ பேரமைப்பு சார்பாகவும் கோடான கோடி நன்றியை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட எங்களின் அத்தனை கோரிக் கைகளையும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் படிப்படியாக நிறைவேற்றுவார் என்று நம்பிக்கையோடு காத்துக்கொண்டிரக்கி றோம் என்றென்றும் தியாகராஜன் வெளியிட்ட அறிக்கையில் தெரி வித்துள்ளார்.. மேலும் புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செய்தி தொடர்பாளர் ரகமத்துல்லா செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *