மதுசூதனன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

அதிமுக அவைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான இ.மதுசூதனன் வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார்.அவரது உடல் தண்டையார்பேட்டையில் உள்ள அவரது உடல் மக்கள் மற்றும் கட்சியினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இந்நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் மதுசூதனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
#MrChe #மிஸ்டர்சே
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews