ஆடிப்பெருக்கு நாளில் பொங்கிவரும் புது வெள்ளம் – ஆறுகளில் நீராட தடையால் கரைகளில் வழிபட்ட மக்கள்

மதுரை: காவிரி ஆற்றில் புதுவெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. பவானி, வைகை, முல்லைப்பெரியாறு, தாமிரபரணி ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களிலும் காவிரி டெல்டா மாவட்டங்களிலும் ஆடிப்பெருக்கு களைகட்டியுள்ளது. ஆறுகளில் புனித நீராட தடை உள்ளதால் ஆற்றங்கரைகளில் மக்கள் காவிரி அன்னையை பூக்களை தூவி வழிபட்டனர்.
ஆண்டு தோறும் ஆடிப்பெருக்கு நாளில் காவிரி கரையோர பகுதிகளில் காவிரி அன்னைக்கு படையலிட்டு பூஜைகள் செய்வது வழக்கம். புதுமண தம்பதிகள் தங்களது திருமண மாலைகளை ஆற்றில் விட்டும், புதுப்பெண்கள் புதிதாக தாலி மாற்றிக் கொள்வது வழக்கம்.கொரோனா நோய்த்தொற்று பரவலின் காரணமாக இன்று நடைபெற இருக்கும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, வடக்கு வாசல், தில்லைநாயகம் படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, கீதாபுரம் படித்துறை மற்றும் ஓடத்துறை ஆகிய படித்துறைகள் மூடப்பட்டுள்ளது. பொதுமக்கள் காவிரி ஆற்றின் கரைகளில் கூடி வழிபாடு செய்வதற்கும், கூடுவதற்கும் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் காவிரி ஆற்றின் கரைகளில் வழிபாடு செய்வதற்கு வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆடிப்பெருக்கு நாளில் மக்கள் கூட்டம் அதிகம் கூடும் இடங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.
#MrChe #மிஸ்டர்சே
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews