நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்

#M.K.Stalin | #Mrche

தமிழக பட்ஜெட் தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில் நாளை முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பதாக அமைச்சரவை கூடி விவாதிப்பது வழக்கம். தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்வார். தமிழகத்தில் மக்கள் நலத் திட்டங்களுக்காக துறை வாரியாக அறிவிக்கப்பட உள்ள புதிய திட்டங்கள், அதற்கு ஆகும் செலவுகள் போன்றவை, அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக பேசப்படும்.இந்நிலையில் , தமிழக அமைச்சரவை கூட்டத்தை முதலமைச்சர் மு . க . ஸ்டாலின் கூட்டியுள்ளார் . நாளை காலை 10 மணியளவில் நாமக்கல் கவிஞர் மாளிகை 10 ஆவது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *