40 வயதில் பதக்க கனவோடு களமிறங்கும் – சஞ்சீவ் ராஜ்புத்

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே என்னுடைய ஒரே இலக்கு” என தீர்க்கமான மனதோடு தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் சஞ்சீவ் ராஜ்புட். முன்னாள் கடற்படை வீரரான இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 50 மீ ரைஃபிள் 3P பிரிவில் பங்கேற்க இருக்கிறார். இவர் பங்கேற்கும் போட்டி ஆகஸ்ட் 2-ம் தேதி காலை 8 மணிக்கு நடைபெற இருக்கிறது.40 வயதாகும் சஞ்சீவ் ராஜ்புத் ஹரியானாவின் ஜகத்ரி எனும் சிறு நகரத்தில் பிறந்தவர். ஒரு விளையாட்டில் பெரிய உயரத்தை தொடுபவர்கள் பொதுவாக சிறு வயதிலிருந்தே அந்த விளையாட்டில் தன்னை அர்ப்பணித்திருப்பார்கள். சஞ்சீவ் அப்படி சிறு வயதிலிருந்தே துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்றவர் இல்லை.கடந்த இரண்டு முறையும் பதக்க வாய்ப்பை தவறவிட்டதால் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். ”40 வயதுக்கு மேல் பதக்கம் வெல்ல முடியுமா என்கிற சந்தேகம் எல்லாம் எனக்கில்லை. நிறைய வீரர்கள் 50 வயதிற்கு மேலயே கூட பதக்கம் வென்றிருக்கின்றனர். எனக்கு அவர்கள்தான் இன்ஸ்பிரேஷன். டோக்கியோவில் தங்கம் வெல்வதே என்னுடைய ஒரே லட்சியம்” என்கிறார்.
#MrChe #மிஸ்டர்சே
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews