விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் படம்

#phoomika | #Mrchenews

பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் பூமிகா என்கிற படத்தில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இது அவருடைய 25-வது படம்.2010-ல் நீதானா அவன் படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர், ஐஸ்வர்யா ராஜேஷ். 2015-ல் வெளியான காக்கா முட்டை படம் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு ஒவ்வொரு வருடம் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.பூமிகா படத்தை ரதிந்திரன் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு – ராபர்ட், இசை – ப்ரித்வி சந்திரசேகர். இதற்கு முன்பு அஸ்வின், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இது வேதாளம் சொல்லும் கதை என்கிற படத்தை ரதிந்திரன் இயக்கியுள்ளார்.இந்நிலையில் பூமிகா படம் ஆகஸ்ட் 22 அன்று மதியம் 3 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த திட்டம் இரண்டு படம் சோனி லைவ் ஓடிடியில் நேரடியாக வெளியானதையடுத்து அவர் கதாநாயகியாக நடித்த மற்றொரு படமான பூமிகாவும் திரையரங்குகளில் நேரடியாக வெளியாகாமல் மாற்று வழியைக் கண்டுள்ளது.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *