சர்கார்’ படம் மீது தொடரப்பட்ட வழக்கு-உயர் நீதிமன்றம் தள்ளுபடி

சர்க்கார் படம் தொடர்பாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது சென்னை சிசிபி போலீஸார் தொடர்ந்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நடிகர் விஜய், நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த படம் சர்க்கார். இந்த படத்தில் ஒரு காட்சியில் அரசின் விலையில்லா திட்டங்களில் வழங்கப்பட்ட பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றதாக கூறி, தேவராஜன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், 2018 ஆம் ஆண்டு முருகதாஸ் மீது நான்கு பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர். மேலும் வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி திரைப்படத்தை தணிக்கை செய்த பிறகு அதற்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தார். மேலும் இந்த வழக்கு காழ்ப்புணர்ச்சியோடு, தனி நபரால் கொடுக்கப்பட புகார் என்று கூறி அந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
#MrChe #மிஸ்டர்சே
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள