வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்ற ரூ1¼ லட்சம் சிக்கியது!!


கோவை:

மேட்டுப்பாளையம்:


மேட்டுப்பாளையத்தில் வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்ற ரூ.1¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. 


அதிகாரிகள் சோதனை :


தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும்படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி ரமண் கிஷோர் தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 பேர் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.


தி.மு.க. நிர்வாகிகள்:

 
உடனே அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்கள் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் என்பதும் அவர்கள் கையில் வாக்காளர்களின் பெயர் மற்றும் ரூ.82 ஆயிரம் இருந்தது. ந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து, தேர்தல் நடத்தும் அதிகாரி குமரேசனிடம் ஒப்படைத்தனர். 


அ.தி.மு.க. நிர்வாகி :

அதுபோன்று மேட்டுப்பாளையம்-ஊட்டி மெயின் ரோட்டில் பறக்கும் படை அதிகாரி அனிதா தலைமையில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்தவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அதில் அவர் அ.தி.மு.க.வை சேர்ந்தவர் என்பதும், வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் கொண்டு செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.43 ஆயிரத்து 500 மற்றும் வாக்காளர்கள் பெயர் பட்டியல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

#MrChe #மிஸ்டர்சே

கோவை மாவட்ட செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Whatsapp Link – https://chat.whatsapp.com/HOcPueJhE47BZZ4JT9jA6y

Facebook Link – https://www.facebook.com/groups/KovaiDistrictNews/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *