கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பறக்கும் படையினர் சோதனை; அதிமுக பிரமுகர் வீட்டில் ரூ.3.53 லட்சம் பறிமுதல் !!


கிருஷ்ணகிரி ,

ஊத்தங்கரை,


தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நாளை (ஏப்ரல் 6) நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு வினியோகத்தை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  சோதனையின் போது உரிய ஆவணமின்றி வாகனங்களில் எடுத்துச்செல்லும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். அதேபோல், பணப்பட்டுவாடா புகார்களில் பல்வேறு அரசியல் கட்சியினர் வீடுகளில் சோதனைகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, ஊத்தங்கரையில் உள்ள அதிமுக பிரமுகர் ராமு வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அதிமுக பிரமுகர் வீட்டில் 3 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதிமுக பிரமுகர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஊத்தங்கரை தேர்தல் அலுவலர் சேது ராமலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

#MrChe #மிஸ்டர்சே

கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Whatsapp Link – https://chat.whatsapp.com/Cvm5EOvWlSp31tIUaIl4da

Facebook Link – https://www.facebook.com/KrishnagiriNewsChannel/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *